திமிங்கிலத்தின் வயிற்றில் 3 நாட்களிருந்து உயிருடன் வெளியில் வந்த மீனவர்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மீனவர் லுயூகி மார்கியூஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன் பிடிக்கச்சென்று, மோசமான வானிலை காரணமாக காணாமற்போயிருந்தார்.
இவரது உறவினர்கள் அளித்த முறைப்பாட்டினால் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
ஆனாலும், லுயூகியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர் புயலில் சிக்கி இறந்திருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால், அவர் தற்போது உயிரோடு திரும்பி வந்துள்ளார். ஒரு திமிங்கிலத்தின் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, ஒரு திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் இருந்ததாகவும், அதன்பின் அந்த திமிங்கிலத்தின் கழிவு வழியாக வெளி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியபோது
மீன் பிடிக்க கடலுக்குச் சென்றபோது, ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக நான் கடலில் வீழ்ந்தேன். அப்போது என்னை ஒரு இராட்சத திமிங்கிலம் விழுங்கி விட்டது. ஆனால், நான் இறக்கவில்லை. அதன் வயிற்றில் உயிரோடு இருந்தேன். அதன் வயிற்றுப் பகுதி குளிராகவும், இருட்டாகவும் இருந்தது. எனது வாட்டர் ப்ரூஃப் கடிகாரத்தில் உள்ள ஒளியின் உதவியில் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் இருந்த கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அதன் வயிற்றுக்குள் இருந்த செரிக்காத உணவுகளின் துர்நாற்றத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் வேறு வழியின்றி இருந்தேன். எப்படியும் உயிர் பிழைப்பேன் என்று நம்பியிருந்தேன். அப்படியே நடந்து விட்டது. மூன்று நாட்கள் குளித்தால்தான் என் மீது உள்ள துர்நாற்றம் போகும்
என்று அவர் தெரிவித்துள்ளார்.
Thank you for visiting my website.