அவன் இவன் 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இதில் ஆர்யா, விஷால் ஆகியோருடன் புதுமுகங்கள் ஜனனி ஐயர் மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.
கதைச் சுருக்கம்
ஒரு தகப்பன், வெவ்வேறு தாய்கள் என்று எதிரும் புதிருமாய் இருக்கும் சகோதரர்களான வால்ட்டர் வணங்காமுடி [விஷால்], கும்புடுறேன்சாமி [ஆர்யா]. ஜமீன் தீர்த்தபதியாக வரும் ஹைனெஸ் [ஜி.எம்.குமார்]. இவர்களுக்கு இடையில் நடக்கும் நகைச்சுவை திரைப்படம். இறுதியில் ஹைனஸ்ஸை அடிமாட்டு ஏலக்காரன் கொலை செய்து விடுகிறான். பழிவாங்கும் ஆக்ரோஷமான கதை. இயக்குனர் பாலாவின் மாறுபட்ட பாத்திர அமைப்புகளோடு விறுவிறுப்பாக செல்லும் கதை.